மனைவி கிருத்திகாவை நம்ப வைத்து ஏமாற்றிய உதயநிதி ஸ்டாலின் - சொன்னதை செய்தாரா?
அண்மையில் பேட்டி ஒன்றில் தனது மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை தான் மீறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியை மீறிய உதயநிதி
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகரும், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின்.
இவரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அண்மையில் கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் உதய நிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நடிக்கப் போகிறேன் என்று கூறியதும் என்ன திடீரென என்று கிருத்திகா கேட்டார். அரசியலுக்கு போக மாட்டேன் என்று தானே காதலிக்கும் போது சொன்னேன் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே என்று கூறினேன். அதன் பின் தான் நடிக்க ஒப்புக் கொண்டார்.
பின்னர் அரசியலில் வரமாட்டேன் என்று சொன்ன வாக்குறுதியை தற்போது மீறி உள்ளதாக காமெடியாக சிரித்தப்படி தெரிவித்துள்ளார்.
தனது மனைவி கிருத்திகா சினிமாவிலும், அரசியலிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தனக்கு அறிவுரை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.