தூங்கி தூங்கியே ரூ.9 லட்சம் சம்பாதித்த பெண் - எப்படி தெரியுமா?
தூங்கியே பென் ஒருவர் ரூ.9 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
தூங்கும் போட்டி
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, தூங்கும் சேம்பியன் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இதில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். நல்ல மெத்தை கொடுத்து தூங்கச் சொன்னார்கள். அவர்களின் தூக்கத்தின் தன்மையை அவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் கண்காணித்தார்கள். போட்டியாளர்களுக்கு எவ்வாறு தூங்கினால் நன்றாக தூங்க முடியும் என்பது குறித்து வல்லுநர்களை கொண்டு பயிற்சியும் கொடுக்கப்பட்டது.
இதில், சாய்ஸ்வரி பாட்டீல் என்ற பெண், தூங்கு ராணி பட்டத்தை வென்று ரூ.9 லட்சத்தை பரிசாக பெற்றுள்ளார். இது குறித்து வேக்ஃபிட் தலைமை மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி குணால் துபே கூறுகையில்,
ரூ.9 லட்சம் பரிசு
''நீண்ட நேர வேலை, தூங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாதது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தூங்கி எழுபவர்கள் களைப்பாக உணர்கின்றனர். எனவேதான் தூக்கத்தை ஊக்கப்படுத்த இப்போட்டியை நடத்துகிறோம்'' என்றார்.
தொடர்ந்து இப்போட்டியில் வெற்றி பெற்ற சாய்ஸ்வரி பாட்டீல் பேசுகையில், ''இரவில் சரியான நேரத்தில் உறங்கி காலையில் சரியான நேரத்தில் எழும்ப வேண்டும். இரவில் சோசியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிடுவது போன்ற இரவு நேர பழக்கங்களை கைவிடுவதன் மூலம் தூங்கும் போட்டியில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
கொரோனா காலத்தில் எனது அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது. ஆடிட்டர் வேலை என்பதால் எனக்கு முறையற்ற தூக்கம் ஏற்பட்டது. இப்போட்டி எப்படி சரியான முறையில் தூங்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது.
இப்போது என்னால் எங்கும் தூங்க முடியும். ஆழ்ந்த உறக்கம் மூளையில் உள்ள கழிவுகளை கழிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல்நிலையை சரி செய்யவும் உதவுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.