தூங்குடா கைப்புள்ள - மின்சார பிரேக்கர் பெட்டி மேல் ஜாலியாக தூங்கும் போதை ஆசாமி
குடிபோதையில் வாலிபர் ஒருவர் மின்சார பிரேக்கர் பெட்டி மேல் தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நெய்வேலி அருகே உள்ள ரவுண்டானாவில் இரவு நேர வெளிச்சத்திற்க்காக ஹை மாஸ் விளக்கு ஒன்று உள்ளது. இதற்கு மின்சாரம் வழங்க பிரேக்கர் பெட்டி ஒன்று அதன் அருகில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டப்பகலில் பிரேக்கர் பெட்டியின் மீது போதை ஆசாமி ஒருவர் படுத்துக்கொண்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரேக்கர் பெட்டி
இந்த வீடியோவில், விபரீதம் உணராமல் மின்சாரம் செல்லும் பிரேக்கர் பெட்டி மேல் படுத்துக்கொண்டு கால்களை ஹை மாஸ் விளக்கு தூண் மேல் வைத்து படுத்துள்ளார். பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதியில் இவ்வாறு நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குடி போதையில் பொது இடங்களில் குடிமகன்கள் இவ்வாறு அலப்பறை செய்யும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.