கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி; தவித்த குழந்தைகள் - கதறும் கணவன்!
குழந்தைகளை தவிக்க விட்டு மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார்.
தகாத உறவு
கேரளா, கண்ணோத் பகுதியை சேர்ந்தவர் டாம்சி(36). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அனக்கம்பொயில் பகுதியை சேர்ந்த ஜினு (38) என்பவருக்கும், இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னதாக டாம்சியை காணவில்லை என கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கணவன் புகார்
அப்போது டாம்சியின் செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு செய்ததில் டாம்சி, ஜினு ஆகிய இருவரும் நீலகிரி, கூடலூரில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீஸார் இருவரையும் பிடித்து கோழிக்கோட்டுக்கு அழைத்து வந்தனர்.
தொடர், விசாரணையில் குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. அதன்பின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.