தகாத உறவு: 22 வயது இளைஞனுடன் 33 வயது பெண் உல்லாசம் - சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கள்ளக்காதல் ஜோடியிடம் கும்பம் நகை பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
தகாத உறவு
திருப்பூர், மாஸ்கோ நகரைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கே.வி.ஆர்.நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒரு பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஊர் சுற்றியும் அடிக்கடி தனிமையிலும் சந்தித்து வந்துள்ளனர்.
நகைப்பறிப்பு
அந்த வகையில், கணியாம்பூண்டி டாஸ்மாக் கடை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு இருவரும் சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட கும்பல் அவர்களை மிரட்டி பெண்ணிடம் இருந்த 6 சவரன் நகையை பறித்துள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
உடனே, அந்த ஜோடி காவல்நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முறை தவறிய உறவு தவறு என்கிற நிலையில், காட்டுப்பகுதியில் இப்படி செய்வது பெரிய குற்றங்களுக்கே வழிவகுக்கும். இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும் அறிவுரை கூறியுள்ளனர்.