அடுத்தடுத்து 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - 10-வது பிரசவத்தில் நிறைவேறிய ஆசை!
பெண் குழந்தைக்கு ஆசைப்பட்ட பெண் ஒருவர் தொடர்ச்சியாக 10 முறை கர்ப்பமாகியுள்ளார்.
பெண் குழந்தை
அமெரிக்காவை சேர்ந்தவர் யலன்சியா ரொசாரியோ (31) என்ற பெண் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தொடர்ந்து 10 முறை கர்ப்பமாகியுள்ளார்.
இதில், முதல் 9 பிரசவத்தில் 9 ஆண் குழந்தைகளும், 10-வது பிரசவத்தில் ஓர் ஆண் - ஒரு பெண் என இரட்டையர்கள் பிறந்துள்ளனர். அவர் ஆசைப்பட்டது போலவே பெண் குழந்தை பிரதபோதிலும், கர்ப்பமாவதை நிறுத்தவில்லை.
11-வது கர்ப்பம்
தனது மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்பதற்காக தற்போது 11-வது முறையாக கர்ப்பமாகியுள்ளார். யலன்சியாவுக்கு பெரிய குடும்பம் வேண்டும் என்ற ஆசை இருந்ததால், தொடர்ச்சியாக குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இவர் தனது 18 வயதில் மூத்த மகனை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு தற்போது 13 வயதாகிறது. யலன்சியா தற்போது தனது குழந்தைகளுடன் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.