160 கிலோ எடையுள்ள பெண்; பிறந்த குழந்தை - 14 ஆண்டுகளுக்கு பின் அதிசயம்!
160 கிலோ எடையுள்ள பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
உடல் பருமன் பிரச்னை
மும்பை அருகே மீரா சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிமோரா டிசோசா(33). 160 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து 3.2 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்தப் பிரசவம் சிசேரியன் முறையில் செய்யப்பட்டது.
இவர் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடல் பருமன் பிரச்னை, ஹைப்பர் தைராய்டிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர். முன்னதாக, டிசோசா கருத்தரிக்க விரும்பி பேரியாட்ரிக் சர்ஜரி செய்து தனது எடையை 185 கிலோவிலிருந்து 130 கிலோவாக அப்போது குறைத்து கொண்டார்.
குழந்தை பிறப்பு
அதிக ஆபத்துள்ள கர்ப்பமாக இருந்ததால் டிசோசா சரியான டயட், உடற்பயிற்சி, அடிக்கடி ஃபாலோ-அப் மற்றும் வழக்கமான அல்ட்ராசோனோகிராபி என எல்லாவற்றையும் பின்பற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், உடல் பருமன் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுடன் போராடியதோடு திருமணமாகி 14 வருடங்கள் கடந்து விட்டதால் என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து தற்போது என் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்த பிறகு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.