138 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை - ஆச்சர்யத்தில் குடும்பம்!

United States of America
By Sumathi Apr 07, 2023 07:02 AM GMT
Report

138 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ள அதிசயம் அரங்கேறியுள்ளது.

பெண் குழந்தை

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ கிளார்க். இவரது மனைவி கரோலின் கிளார்க். இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக, பெண் குழந்தை பிறந்தது. கடந்த, 1885ம் ஆண்டுக்குப் பின், ஆண்ட்ரூ கிளார்க் குடும்பத்திற்கு, தலைமுறை தலைமுறையாக பெண் குழந்தை பிறக்கவேயில்லை.

138 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை - ஆச்சர்யத்தில் குடும்பம்! | Us Family Welcomes 1St Daughter In Over 130 Years

ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. தற்போது, ஆட்ரி தான் 138 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த அந்த அதிசய பெண் குழந்தை என்பதால் அதனை அவர்கள் குடும்பமே கொண்டாடி தீர்த்து வருகிறது.

மகிழ்ச்சியில் குடும்பம்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கவில்லை என, என் கணவர் ஆண்ட்ரூ கிளார்க் கூறியதை முதலில் நான் நம்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபோது தான் உண்மை தெரியவந்தது.

138 ஆண்டுகளுக்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை - ஆச்சர்யத்தில் குடும்பம்! | Us Family Welcomes 1St Daughter In Over 130 Years

கர்ப்பமாக இருந்த போது, பெண் குழந்தை பிறக்குமா, ஆண் குழந்தை பிறக்குமா என்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என மட்டுமே முடிவு செய்தோம். ஆனால், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால், நிலவில் உள்ளது போல் உணர்கிறோம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.