கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
கர்ப்பம் தரித்த பிறகு பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது.
கர்ப்ப காலத்தில் நீங்கள் முன்பை விட அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் அப்படி சாப்பிட்டால் தான் உங்களது கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும்.
குழந்தையின் மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் அப்போது தான் மேம்படும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. பெண்கள் பிரசவத்தின் பொழுது என்ன உண்ண வேண்டும், என்ன உண்ணக் கூடாது என வெகுவாகக் குழம்புகின்றனர்.
கீழ்காணும் உணவுகளை உண்டாலே, ஆரோக்கியமாக பிரசவம் நடைபெறும். ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும்.
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி பார்ப்போம் -
தண்ணீர்
கர்ப்ப காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும். ஏனென்றால் நீர் குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் தொற்று போன்றவை இல்லாமல் இருக்கும்.
பருப்பு வகைகள்
சைவ வகை உணவுகளை எடுத்து கொள்ளும் பொழுது தானிய வகை உணவுகள், பருப்பு வகை உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள், கீரை வகை உணவுகள் போன்றவற்றை தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.
புரதம் நிறைந்த உணவு
புரதம் நிறைந்த பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உலர்ந்த பழ வகைகள்
தினமும் காலையில் உலர் பழவகைகள் முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, நெல்லிக்காய் மற்றும் அத்திப்பழம் போன்றவை தேவையான அளவு சாப்பிட வேண்டும்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.
சாப்பிடும் முறை
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மூன்று வேலை எடுத்து கொள்ளும் உணவை ஆறு வேலையாக எடுத்து கொள்ள வேண்டும்.
முட்டை
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.
மீன்
மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.