ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு..காதலியை கரம்பிடிக்க ஆணாக மாறிய பெண்!

Uttar Pradesh India
By Sumathi 5 மாதங்கள் முன்

பெண் ஒருவர் தன்னுடைய பெண் காதலியுடன் இருக்கும் லெஸ்பியன் பாலியல் உறவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஆணாக மாறியுள்ளார்.

பாலியல் உறவு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பாலியல் உறவில் இருந்து வரும் இரண்டு பெண்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொரு விட்டுப் பிரியாமல் இருக்க சபதம் மேற்கொண்டனர்.

ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு..காதலியை கரம்பிடிக்க ஆணாக மாறிய பெண்! | Woman Switches Gender Be With Girlfriend Oppose

ஆனால் குடும்பத்தினர் தங்கள் உறவை ஏற்காததால், அவர்களில் ஒருபெண் தனது பாலினத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். இரு பெண்களும் ஒருவரையொருவர் வெறித்தனமாகக் காதலித்தனர்.

கடும் எதிர்ப்பு

எனவே எந்த தடைகளையும் தவிர்க்கவும், மற்றவர்களின் குறுக்கீட்டை நிறுத்தவும் ஒரு பெண் தனது பாலினத்தை மாற்ற முடிவு செய்தது பலதரப்பிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு..காதலியை கரம்பிடிக்க ஆணாக மாறிய பெண்! | Woman Switches Gender Be With Girlfriend Oppose

இந்த உறவுக்காக இரு பெண்களும் தங்கள் குடும்பத்தினரை சம்மதிக்க வைக்க கடுமையாக பாடுபட்டனர், கெஞ்சி கூத்தாடினர், ஆனால் எந்த குடும்பம் இத்தகைய உறவுக்கு ஒப்புக் கொள்ளும்?

 அறுவை சிகிச்சை

இதனையடுத்து அந்தப் பெண்களில் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார், பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்,

அப்போது அவரது மேல் உடல் பாகங்கள் மற்றும் மார்பு மறுசீரமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த அறுவை சிகிச்சைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் அதன் பிறகு இந்தப் பெண் ஆணாக மாறிவிடுவார்.

டெஸ்டஸ்டரோன்

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்ற்கு மருத்துவர் மோஹித் ஜெயின் கூறும்போது பெண்ணுக்கு டெஸ்டஸ்டரோன் மாற்று சிகிச்சை அளிக்கப்படும். டெஸ்டஸ்டரோன் சிகிச்சையின் மூலம் மார்பில் முடி வளரும்.

மேலும் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த பெண் கருத்தரிக்க முடியாது, என்ற மருத்துவர், இதுபோன்ற அறுவை சிகிச்சை நடத்தப்படுவது இதுவே முதல் முறை,

சுமார் 18 மாதங்களில் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் முழு உடல் ஆரோக்கியமும் பரிசோதனை செய்யப்பட்டது, அவர் நன்றாக இருக்கிறார்.

ஓடும் காரில் தாயும், மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!