உத்தரப் பிரதேசத்தில் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
உத்தரகாண்ட், கோவா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்றது.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வந்தனர்.
கோவாவில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29% வாக்குகளும், உத்தரகாண்டில் 59.37% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் 2-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 60.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை உத்தரப் பிரதேச ராம்பூரில் தொடங்கப்பட்ட வாக்கப்பதிவு முடிவுப்பெற்றுள்ளது.