மயங்கி விழுந்த பெண் - ஆம்புலன்சிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
பெண் ஆம்புலன்சில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
பீகார், மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளம் பெண்கள் கலந்துகொண்டனர்.
இதில் நடந்த உடல்தகுதி தேர்வின்போது, 26 வயது பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அரைமயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் ஊழியா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்சில் கொடூரம்
தொடர்ந்து மயக்கம் தெளிந்ததும், நோ்ந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் டெக்னீசியன் அஜித் குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
4 பேர் மீது புகார் கூறிய நிலையில், மேலும் இருவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.