இனி திருமணத்திற்கு முன் HIV பரிசோதனை கட்டாயம் - அரசு திட்டம்!
திருமணத்துக்கு முன் HIV பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது.
HIV பரிசோதனை
மேகாலயாவில் HIV நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே அம்மாநில அரசு, HIV /ஏய்ட்ஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொடர்ந்து மாநில துணை முதல்வர் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். இதில் எய்ட்ஸ் சோதனையை சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசு திட்டம்
பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ, எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம்.

எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும் எனத் தெரிவித்துள்ளார்.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil