முன்னாள் காதலனை பழிவாங்கனும்; சூப்பில் விஷம் கலந்த பெண் - கடைசியில் 5 பேர் பலி!
முன்னாள் காதலனுக்கு காதலி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
விஷம் வைத்த காதலி
நைஜீரியாவில் எடோவில் உள்ள ஒரு வீட்டின் அறையில் 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் ஒரு பெண் மட்டுமே காரணமாக இருந்துள்ளார்.
அந்த வீட்டில் வசிக்கும் ஒரு ஆணை, பெண் ஒருவர் காதலித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அவருடைய காதலனுக்கும் பிரேக்அப் நடந்ததாக கூறப்படுகிறது.
5 பேர் பலி
இதனால் ஆத்திரமடைந்த பெண் காதலனை பழிவாங்க மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை அவர் தனது சகோதரரிடமும், மற்ற நண்பர்களிடமும் பகிர்ந்து குடித்துள்ளார். இதனையடுத்து அந்த சூப்பை குடித்த காதலன் உட்பட மற்ற 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சூப்பில் கலக்கப்பட்ட விஷம் அல்லது ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை இரண்டில் ஒன்று இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.