காதலை முறித்த +2 மாணவி - காட்டிற்கு வரவழைத்து முன்னாள் காதலன் செய்த கொடூரம்
+2 மாணவி முன்னால் காதலனால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார்.
+ 2 மாணவி காதல்
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் +2 படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(28) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது.
இதனிடையே விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் பள்ளி மாணவி தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வு
ஆனால் காதலை தொடர விரும்பிய விக்னேஷ், தனியாக காட்டிற்கு வந்து சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். சந்திக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பள்ளி முடிந்ததும் விக்னேஷை சந்திக்க வந்த மாணவியை, காட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதை வெளியில் சொல்லி விடுவார் என்ற பயத்தில், சிகரெட் லைட்டரால் மாணவியின் துணியில் தீ வைத்துள்ளார்.
கைது
உடலில் தீப்பற்றி மாணவி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர அங்கிருந்து விக்னேஷ் தப்பி ஓடியுள்ளார். இதன் பின் பலத்த தீக்காயங்களுடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.