ஒரே நாளில் 1000 முறை கால் செய்த முன்னாள் காதலி - கோவத்தில் காதலர் செய்த செயல்
பிரிந்து சென்ற காதலனுக்கு 1000 முறை கால் செய்து காதலி தொந்தரவு செய்துள்ளார்.
காதல்
இங்கிலாந்தை சேர்ந்த செவிலியரான 30 வயதான சோஃபி கோல்வி மற்றும் 54 வயது பல் மருத்துவரான பக்லிரோ ஆகியோர் ஒரே மருத்துவமனையில் பணி புரிந்து வந்துள்ளனர்.
2021 ல் தனது மனைவி ஷரோன் இறந்த பின் சோஃபியுடன் பக்லிரோ பழகி வந்துள்ளார். முதலில் நன்றாக பழகி வந்த சோஃபி நாட்கள் செல்ல செல்ல தனது காதலரை அதிகமாக கண்காணிக்க தொடங்கியுள்ளார்.
கால் தொந்தரவு
இதனால் பக்லிரோ காதலில் சோஃபியிடமிருந்து விலக தொடங்கியுள்ளார். பிரிவை ஏற்க முடியாத சோஃபி, தனது காதலருக்கு ஒரே நாளில் 965 முறை கால் செய்து அடுத்த நாள் 1,000க்கும் மேற்பட்ட முறை கால் செய்து தொந்தரவு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அவரது காரில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்துள்ளார். மேலும் அவரது 10 கோடி மதிப்பிலான வீட்டின் கதவை உடைத்து படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.
இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத பக்லிரோ, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 20 வாரம் சிறை தண்டனையும், 20 வாரம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.