டீ போட்டு தரல.. மருமகளை கழுத்தை நெரித்து கொன்ற மாமியார் - கொடூர சம்பவம்!
டீ போட்டு தராத மருமகளை, மாமியார் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மருமகள் செயல்
தெலங்கானா, மோமின்பேட்டையைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் 2015ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஆறு வயது மகளும், எட்டு வயது மகனும் உள்ளனர்.
இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம்(53) வசித்து வந்துள்ளார். தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.
மாமியார் கொடூரம்
இந்நிலையில், மருமகளிடம் டீ போட்டு தருமாறு ஃபர்சானா பேகம் கேட்டுள்ளார். ஆனால், தேநீர் போட்டுத் தரமுடியாது என்று அஜ்மீரா கூறியுள்ளார். இதனாக் ஆத்திரமடைந்த மாமியார் தாவணியால் மருமகள் கழுத்தை நெறித்துள்ளார்.
இதில் மருமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.