நானும் அந்த பெண்ணும் சமரசம் ஆகிவிட்டோம் - ஜாமீன் கோரி பூசாரி மனு தாக்கல்!
பாலியல் வழக்கில் சிக்கிய கோயில் பூசாரியம் பாதிக்கப்பட்ட பெண்ணும் சமரசம் ஆகிவிட்டனர்.
பூசாரி மனு
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பெண் (30) ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். "என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு பாரிமுனையில் உள்ள அம்மன் கோவில் பூசாரியான கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார்.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். பின்னர் தீர்த்தம் எனக்கூறி திரவம் ஒன்றை கலந்து கொடுத்தார். அதனை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிய நிலையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்.
சமரசம் ஆகிவிட்டோம்
பின்னர் ஆசைவார்த்தை கூறி அம்மன் கோவிலில் தாலி கட்டி என்னை திருமணம் செய்து கொண்டார்.இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனது கருவை கலைத்து விட்டதாகவும்,பிறகு பாலியல் தொழிலில் தன்னை தள்ள முயன்றதாகவும் அந்த பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பூசாரி கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.பிறகு மாயமான பூசாரி மீது 6 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் தனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.