தொகுப்பாளினி பாலியல் வழக்கு - பதுங்கி இருந்த கோயில் பூசாரி கைது!
பாலியல் வழக்கில் சிக்கி பதுங்கி இருந்து காளிகாம்பாள் கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் வழக்கு
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். "என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.
எனக்கு சென்னை பாரிமுனையில் உள்ள அம்மன் கோவில் பூசாரியான கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். பின்னர் தீர்த்தம் எனக்கூறி திரவம் ஒன்றை கலந்து கொடுத்தார்.
அதனை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிய நிலையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். பின்னர் ஆசைவார்த்தை கூறி அம்மன் கோவிலில் தாலி கட்டி என்னை திருமணம் செய்து கொண்டார்.இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனது கருவை கலைத்து விட்டதாகவும்,
பூசாரி கைது
பிறகு பாலியல் தொழிலில் தன்னை தள்ள முயன்றதாகவும் அந்த பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பூசாரி கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. அவரது போனில் இருந்த பெண்களின் ஆபாச வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆனால் அதற்குள் மாயமான பூசாரி மீது 6 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க அவருக்கு லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
தான் புகார் அளித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறார். இந்த சூழலில், கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.