கோயில் திருவிழா - ஆட்டை வெட்டி பச்சையாக ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு!
கிடா ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் திருவிழா
கோபி நல்லகவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் பழனிச்சாமி (56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணமார் கோயில் பூசாரி ஆவார்.இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை என கூறப்படுகிறது. அதற்கான சிகிச்சையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்று வந்துள்ளார்.
அங்கு தற்போது கோயில் திருவிழா நடைபெற்று வருவதால் தீவிர பணிகளில் பழனிச்சாமி ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், திருவிழாவில் பரண் கிடாய் பூஜையில் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி குடித்துள்ளார். ரத்தத்தை விடாமல் குடித்த பூசாரி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பூசாரி உயிரிழப்பு
அவரை பரிசோதித்த ஊர் பெரியவர்கள் பூசாரி உயிரிழந்ததாக கூறினர். இது குறித்து அருகில் உள்ள சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிசாமியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் விசாரணையில், ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து பூசாரி உட்பட 5-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டதாகவும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.