2022 ஆம் ஆண்டின் இறுதியோடு உலகை விட்டு விடைபெற்றார் முன்னாள் போப் ஆண்டவர்

Death
By Nandhini Dec 31, 2022 12:43 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

முன்னாள் போப் 16ம் பெனடிக் இன்று உயிரிழந்துள்ள செய்தி தற்போது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

போப் 16ம் பெனடிக் காலமானார்

ஓய்வுபெற்ற போப் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் இன்று உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக தகவல் அறிவித்துள்ளது. போப் எமரிட்டஸ் இன்று காலை 9:34 மணிக்கு (பிலிப்பைன்ஸ் நேரப்படி மாலை 4:34) உயிரிழந்துள்ளதாக ஹோலி சீ பிரஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போப் எமரிட்டஸ் 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி முதல் 2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அன்று ராஜினாமா செய்யும் வரை கத்தோலிக்க தேவாலயத்தில் பணியாற்றினார்.

95 வயதாகும் போப் எமரிட்டஸ் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.

இந்நிலையில், போப் 16ம் பெனடிக் உயிரிழந்துள்ளதையடுத்து உலக நாட்டுத் தலைவர்களும், உலக மக்களும் அவருக்கு சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

benedict-xvi-died-today