நள்ளிரவில் சூடா டீ கேட்ட மாமியார் - அடித்தே கொன்ற மருமகள்!

Attempted Murder Crime Pudukkottai
By Sumathi Mar 08, 2023 06:38 AM GMT
Report

மாமியாரை மருமகள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீ கேட்ட மாமியார்

புதுக்கோட்டை, மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள்(75). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி அவரின் குடும்பத்துடன் தாய் வசித்து வருகிறார். இவரது மருமகள் கனகு(42). இந்நிலையில், தலைவலியால் பழனியம்மாள் மருமகளிடம் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார்.

நள்ளிரவில் சூடா டீ கேட்ட மாமியார் - அடித்தே கொன்ற மருமகள்! | Daughter In Law Killed Mother In Law

தூக்கத்தில் இருந்த மருமகள் எழுந்து டீயும் போட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் டீ மிகவும் ஆறிப்போய் இருந்ததாக மருமகளை திட்டியுள்ளார். இதனால், நள்ளிரவில் டீ போட்டு கொடுத்ததற்கு நன்றி கூறாமல் இப்படி திட்டுகிறீர்களே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொன்ற மருமகள்

ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த மருமகள் இரும்பு கம்பியை எடுத்து மாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் கதறிய பழனியம்மாள் சத்தம் கேட்டு மகனும் அக்கம்பக்கத்தினரும் வந்து பார்த்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மருமகளை கைது செய்துள்ளனர்.