கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமாவை கொன்ற பெண் - நாடகமாடி சிக்கியது எப்படி?
பெண் ஒருவர் காதலனோடு சேர்ந்து உறவினரை கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
சென்னை, கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநிலத்தவர்கள் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்டைச் சேர்ந்த மோகன் புஜக்கர்(38), என்பவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினரான சோனியா(33) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் உடனே உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன் புஜக்கர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை, யாரோ ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் இறந்தாக தெரியவந்தது. மேலும், விசாரித்ததில் சோனியா தனது மாமா மோகன் புஜக்கருடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
நாடகமாடிய காதல் ஜோடி
அப்போது சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தகாத உறவாக மாறியுள்ளது. இதனை மோகன் புஜக்கர் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று சுசாந்தா பர்மன் வீட்டிற்கு வந்து சோனியாவிற்கு வளையல் அணிவித்துள்ளார். அப்போது அங்கு வந்த மோகன் புஜக்கர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன் புஜக்கரை மார்பில் குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அதன்பின் இருவரும் சேர்ந்து அவர் தற்கொலை செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளனர். இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.