பேராசிரியருடன் தகாத உறவு.. மணாலி ட்ரிப்பில் மாசமாக்கிய மாணவர் - கதறும் ஆசிரியர்!

Sexual harassment Crime Punjab
By Vinothini Nov 06, 2023 12:14 PM GMT
Report

மாணவர் ஒருவர் ஆசிரியரை சீரழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார்

ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள பல்கலைக் கழகத்தில் 35 வயதான பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். அதே காலேஜில் பயின்ற மாணவர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்துள்ளார். அதில் அவர், "கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவரை கல்லூரியில் சந்தித்தேன். மே மாதம் இருவரும் அதிகாரப்பூர்வ பயணமாக மணாலிக்கு சென்றோம்.

professor been in relationship with student

அங்குள்ள சிறிய கோயிலில் வைத்து மாணவர் என்னை திருமணம் செய்துகொண்டார். விரைவில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்கிறேன் என்றும் உறுதியளித்தார். இரண்டு முறை நான் கர்ப்பமடைந்தேன்.

ஆனால், அதன்பிறகு மாணவன் என்னை திருமணம் செய்துகொள்வதற்கு மறுத்துவிட்டான். நான் மாணவனின் குடும்பத்தினரை சந்தித்து முறையிட்டபோது, அவர்கள் கருவைக் கலைத்துவிடும்படி என்னை கட்டாயப்படுத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.

சந்தேகம் இருந்தால் ஹோட்டலுக்கு வா.. இளம்பெண்ணை அழைத்து 40 வயது நபர் செய்த காரியம் - அதிர்ச்சி!

சந்தேகம் இருந்தால் ஹோட்டலுக்கு வா.. இளம்பெண்ணை அழைத்து 40 வயது நபர் செய்த காரியம் - அதிர்ச்சி!

நீதிமன்றம்

இந்நிலையில், அந்த புகாரின் பேரில் மாணவர் மீது பாலியல் வன்கொடுமை, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குர்கான் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதில் கைது செய்யாமல் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி, "35 வயதான பேராசிரியர் phd முடித்துள்ளவர் என்பதால் நிச்சயம் உயர் கல்வி அறிவைக் கொண்டவர்.

supreme court

இருவருக்கும் இடையிலானது குரு - சிஷ்யன் உறவு முறை. 20 வயது மாணவனுடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்த நேரத்தில் தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதையோ, மாணவனை விட தனக்கு வயது மிக அதிகம் என்பதையோ மறந்திருக்க முடியாது. மாணவர் போன்ற வயதில் சிறியவருடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேராசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மாணவனுடன் பேராசிரியர் உடலுறவில் ஈடுபட்டதோடு அதனை ஒரு வருடம் வரை தொடரவும் செய்திருக்கிறார். மேலும், மாணவனுடன் கட்டாயத்தின் பேரில் இல்லாமல் தாமாகவே முன்வந்து உறவில் இருந்திருக்கிறார்" என்று கூறி மாணவருக்கு ஜாமீன் வழங்கினார்.