கள்ளக்காதலில் உல்லாசம் - இடையூறாக இருந்த குழந்தைகள் - கொன்ற கொடூரத் தாய்!
தகாத உறவுக்காக தாய் தனது 2 குழந்தைகளை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீத்தல்(25). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவர் வெளியே சென்று வீடு திரும்பி, தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்ப முயன்றுள்ளார். உடனே, அவரது மனைவி குழந்தைகள் அயர்ந்து தூங்குவதால் அவர்களை எழுப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, குழந்தைகளிடத்தில் எந்தவித அசைவும் இல்லாததால் கணவர் குழந்தைகளை மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்ததில் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் கொலை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், 2 குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஷீத்தலுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்த நபருடன் ஷீத்தல் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்த ஷீத்தல் குழந்தைகளை கொன்றது தெரியவந்தது.
இதனையடுத்து ஷீத்தல் கைது செய்யப்பட்டுள்ளார்.