தாய்மாமாவுடன், மனைவி தகாத உறவு - நள்ளிரவில் மருமகன் வெறிச்செயல்!
மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த சொந்த மாமாவை, மருமகன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
ராஜஸ்தான், கஜூரியா பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(45). பகோரா கிராமத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் அவரது மருமகன் பிரகாஷ்(30) வீடு உள்ளது. இவர் குஜராத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி கிராமத்தில் தனது 1 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில், தாய்மாமா சங்கருடன் தனது மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார்.
நள்ளிரவில் கொடூரம்
இதனையடுத்து, திடீரென வீட்டிற்கு இரவில் சென்றுள்ளார். அப்போது மாமாவுடன், மனைவி தனிமையில் இருந்ததை பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தடியை எடுத்து மாமாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரகாஷை தீவிரமாக தேடி வருகின்றன