82 வயது மாமனாரின் ரூ.300 கோடி சொத்து - மருமகள் செய்த காரியம் - அதிர்ச்சி!

India Maharashtra Crime
By Jiyath Jun 09, 2024 07:09 AM GMT
Report

தனது மாமனாரை கார் ஏற்றி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாமனார் கொலை 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பாலாஜிநகர் பகுதியைச் சேர்ந்த புருசோத்தம் (82) என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் புருசோத்தம் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது.

82 வயது மாமனாரின் ரூ.300 கோடி சொத்து - மருமகள் செய்த காரியம் - அதிர்ச்சி! | Woman Held For Killing Father In Law

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது மருமகள் அர்ச்சனாவை (53) பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. பலியான புருசோத்தமுக்கு ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது.

8 ஏக்கர் நிலம்.. வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - காத்திருந்த அதிர்ச்சி!

8 ஏக்கர் நிலம்.. வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - காத்திருந்த அதிர்ச்சி!

மருமகள் கைது 

இதனை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர நினைத்த அர்ச்சனா, தனது கணவரின் கார் டிரைவர் மற்றும் கூட்டாளிகள் 2 பேரின் மூலம் மாமனாரை கார் ஏற்றி கொன்றுள்ளார். பின்னர் அந்த கொலையை விபத்து போன்று சித்தரிக்க முயற்சி செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

82 வயது மாமனாரின் ரூ.300 கோடி சொத்து - மருமகள் செய்த காரியம் - அதிர்ச்சி! | Woman Held For Killing Father In Law

இதனையடுத்து அர்ச்சனாவை கைது செய்த போலீசார், தலைமறைவான டிரைவர் உள்பட 3 கூட்டாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். அர்ச்சனா நகர திட்டமிடல் துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.