8 ஏக்கர் நிலம்.. வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - காத்திருந்த அதிர்ச்சி!

Tamil nadu Crime Vellore
By Jiyath Jun 08, 2024 11:01 AM GMT
Report

நிலம் விற்றது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

புகார் மனு 

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு வீரபாண்டியன். இவர் கடந்த ஆண்டு வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் "நானும் எனது மனைவி கெஜலட்சுமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம்.

8 ஏக்கர் நிலம்.. வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - காத்திருந்த அதிர்ச்சி! | Wife Sold 8 Acres Of Land Husband Shocked

சேர்ந்து வாழ்ந்தபோது இருவரின் பெயரிலும் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் 8 ஏக்கர் 11 சென்ட் நிலம் வாங்கினேன். பிரிந்த பிறகு நான் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன்.

இன்ஸ்டாவில் பல பேருடன் பேச்சு; கணவன்-மனைவி இடையே தகராறு - இறுதியில் சோகம்!

இன்ஸ்டாவில் பல பேருடன் பேச்சு; கணவன்-மனைவி இடையே தகராறு - இறுதியில் சோகம்!

மனைவி கைது 

இதனிடையே போலியான வாழ்நாள் சான்றிதழை தயார் செய்த கெஜலட்சுமி, எனக்கு தெரியாமல் அந்த 8 ஏக்கர் 11 சென்ட் நிலத்தை வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டார். எனவே, மனைவி கெஜலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

8 ஏக்கர் நிலம்.. வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் - காத்திருந்த அதிர்ச்சி! | Wife Sold 8 Acres Of Land Husband Shocked

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், நிலம் விற்ற பணத்துடன் கெஜலட்சுமி தலைமறைவானார். இதனால் போலீசார் அவரை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை சோளிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த கெஜலட்சுமி நேற்று பிடிபட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.