இதை செய்தால் பதவி உயர்வு - பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்த போலி அதிகாரி!

Tamil nadu Chennai Crime
By Jiyath May 02, 2024 06:30 AM GMT
Report

பெண் போலீசிடம் தகாத முறையில் செல்போனில் பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி அதிகாரி 

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில்  "கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி நான் பணியில் இருந்தபோது, ஆயுதப்படை போலீஸ் ஏட்டு எனக்கு செல்போனில் பேசினார்.

இதை செய்தால் பதவி உயர்வு - பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்த போலி அதிகாரி! | Fake Police Officer Arrested In Chennai

அவர் தான் எனக்கு எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்பதை தெரிவிப்பார். அன்றைய தினம் அவர் பேசும்போது, பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நீ செல்கிறாயா? என்று கேட்டார். நானும் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். சற்று நேரத்தில் அந்த பெண் போலீஸ் அதிகாரி உன்னிடம் பேசுவார் என்றும், உன்னிடம் நீ செய்ய வேண்டிய பணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்றும் கூறினார்.

அப்போது செல்போனில் பேசிய பெண் ஒருவர், தான் சென்னையில் கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றுகிறேன் என்றும், என்னை அவருக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்தார். மேலும் தான் சொல்லும் இந்த வேலையை பொறுப்போடு செய்தால் சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வாங்கி தருவதாகவும், சொந்தமாக வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டினார். அப்போது நான் அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று திருப்பிக் கேட்டேன். அதற்கு அந்த நபர் நீ ஒரு பெரும் செல்வந்தரை நான் சொல்லும் இடத்தில் சந்திக்க வேண்டும் என்றார்.

இன்ஸ்டாகிராமில் 20.. நேரில் 45; பார்த்ததும் பதறியடித்து ஓடிய வாலிபர் - என்ன நடந்தது?

இன்ஸ்டாகிராமில் 20.. நேரில் 45; பார்த்ததும் பதறியடித்து ஓடிய வாலிபர் - என்ன நடந்தது?

அதிரடி கைது 

மேலும் அவரது ஆசைக்கு இணங்கி அவர் சொல்லும்படி நடந்து கொண்டால் பதவியும், வீடும் உன்னைத் தேடி வரும் என்று கூறினார். இந்த பேச்சை கேட்டு நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். உடனே அவரிடம் 'நான் அதுபோன்ற பெண் இல்லை என்றும், பதவி உயர்வும், வீடும் எனக்கு தேவையில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தேன்.

இதை செய்தால் பதவி உயர்வு - பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்த போலி அதிகாரி! | Fake Police Officer Arrested In Chennai

திடீரென்று அந்த நபர் ஆண் குரலில் பேசத்தொடங்கினார். நான் சொல்கிறபடி கேட்காவிட்டால் நீ பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினார். நான் உங்கள் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று தெரிவித்தேன். உடனே அந்த நபர் போன் இணைப்பை துண்டித்துவிட்டார். பெண் போலீஸ் அதிகாரி போல் பேசி என்னை மிரட்டிய குறிப்பிட்ட நபர் யார் என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பெண் குரலில் பேசி பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்த போலி போலீஸ் அதிகாரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பெண்களிடம் செல்போனில் ஆசை வார்த்தைகளை பேசி கூறி உல்லாச வலையில் விழவைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளி பெரியசாமி கைது செய்யப்பட்டார்.