இன்ஸ்டாகிராமில் 20.. நேரில் 45; பார்த்ததும் பதறியடித்து ஓடிய வாலிபர் - என்ன நடந்தது?
இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை தாக்கி செல்போனை பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பழக்கம்
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தீபேந்திரா சிங் (20). இவருக்கு இன்ஸ்டாகிராமில் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் முகப்பில் 20 வயது அழகிய புகைப்படத்தை வைத்திருந்தார்.
இதில் மயங்கிய தீபேந்திரா, அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து தீபேந்திரா சிங் அங்கு காத்திருந்துள்ளார். அப்போது சுமார் 45 வயது பெண் ஒருவர் அவரிடம் நெருங்கி வந்தார்.
இளைஞர் கைது
அந்த பெண்ணை பார்த்த தீபேந்திரா, நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு "நான் தான் உங்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசியவர்" என்று அந்த பெண் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தீபேந்திரா "இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் உள்ளது யார் என்று கேட்டார்.
அது நான் தான்.. எனது இளம் வயது போட்டோ அது, எனக்கு இப்போது 45 வயதாகிறது என்று அந்த பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபேந்திரா அந்த பெண்ணை தாக்கி செல்போனையும் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து தீபேந்திரா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.