வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள்; தங்க சங்கிலியை பரிசளித்த பெண் - விலை தெரியுமா?
பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.
தங்க சங்கிலி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண் டைகர் என பெயரிடப்பட்டுள்ள நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் டைகரின் பிறந்தநாள் என்பதால், அதனை கொண்டாடுவதற்காக அவர் ஷாப்பிங் சென்றுள்ளார்.
பின்னர் ஒரு நகைக்கடையில் இருந்து தனது நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை வாங்கி பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ அந்த நகைக்கடையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோ
அதில், சல்தான்ஹா தனது வளர்ப்பு நாய் டைகருக்கு தங்க சங்கிலியை தேர்ந்தெடுக்கிறார். பின்னர் அதனை நாயின் கழுத்தில் அணிவித்தும், உற்சாகமான மகிழ்ச்சியுடன் டைகர் வாலை ஆட்டுகிறது.
இந்த சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளார். இதைப் பார்த்த
நெட்டிசன்கள்
பலரும் வளர்ப்பு நாய் மீது சரிதா சல்தான்ஹா வைத்துள்ள பாசத்தை பாராட்டி வருகின்றனர்.