320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா?

Italy World
By Jiyath Jul 08, 2024 01:38 PM GMT
Report

320 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் சின்னஞ்சிறு நாடான செபோர்கோ பற்றிய தகவல்கள்.

சின்னஞ்சிறு நாடு

உலகில் மக்கள் தொகை என்பது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் என்றால் நம் நினைவுக்கு வருவது இந்தியா, சீன மற்றும் அமெரிக்கா.

320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா? | Smallest Country In The World 320 Population

அதேபோல் உலகில் சிறிய நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் சான் மரினோ, வாடிகன் சிட்டி போன்ற நாடுகளின் பெயர்கள் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அதை விட சின்னஞ்சிறு நாடு ஒன்று உள்ளது.

அந்நாட்டின் பெயர் 'செபோர்கோ'. இந்த நாட்டின் பரப்பளவு 14 சதுர கிலோமீட்டரில் மட்டுமே. இங்கு செபோர்கா லுய்கினோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. இது 6 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.

320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா? | Smallest Country In The World 320 Population

இந்திய மதிப்பில் ஒரு செபோர்கோ நாணயம் 499 ரூபாய். இந்த நாடு சுதந்திரம் பெற்று 1000 ஆண்டுகளுக்கு முன்புதான் அதன் உரிமையாளரை இளவரசராக போப் அறிவித்தார். கடந்த 1719ம் ஆண்டு இந்த நாடு விலைக்கு விற்கப்பட்டு, 1800ல் இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்ட போது, ​​மக்கள் இந்த கிராமத்தை மறந்துவிட்டனர்.

வங்கிக் கணக்கிலிருந்து 25 பைசா கேட்ட நபர் அதிரடி கைது - என்ன நடந்தது..?

வங்கிக் கணக்கிலிருந்து 25 பைசா கேட்ட நபர் அதிரடி கைது - என்ன நடந்தது..?

இளவரசி நினா

பின்னர் 1960ம் ஆண்டு முடியாட்சி முறைப்படி செபோர்கா நாடு இத்தாலிக்குள் வரவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர். ஆனால் 'ஜார்ஜியோ 1' என்பவர் தன்னை அந்நாட்டின் இளவரசராக அறிவித்துக் கொண்டார்.

320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா? | Smallest Country In The World 320 Population

அவர் அடுத்த 40 ஆண்டுகளில், அரசியலமைப்பு, நாணயம், முத்திரை மற்றும் தேசிய விடுமுறை ஆகியவற்றை உருவாக்கினார். பின்னர் 320 பேர் கொண்ட செபோர்கோ நாட்டில் இளவரசர் மார்செலோ அடுத்த மன்னரானார்.

தற்போது இளவரசி நினா என்பவர் கடந்த 2019ம் ஆண்டு இளவரசியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 297 பேரை ஆட்சி செய்து வருகிறார். இந்த நாட்டிற்கு வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்று அர்த்தமில்லை.

செபோர்கோ நாட்டுக்குள் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. செபோர்கா நாட்டில் அழகான பழைய வீடுகள் மற்றும் உணவகங்கள் இருப்பதால் சில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர்.