உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தில் பின்லாந்து - மோசமான இடத்தில் இந்தியா!

India Finland World
By Jiyath Mar 20, 2024 07:27 AM GMT
Report

2024-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

மகிழ்ச்சியான நாடுகள் 

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு தனி நபர்களின் வாழ்க்கைத் திருப்தி,

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தில் பின்லாந்து - மோசமான இடத்தில் இந்தியா! | Worlds Happiest Countries In 2024 Finland First

அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7-வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தில் உள்ளது.

போர்வை, கண்ணாடி, மரக்கட்டைகள் சாப்பிடும் 3 வயது குழந்தை - வேண்டுகோள் விடுத்த தாய்!

போர்வை, கண்ணாடி, மரக்கட்டைகள் சாப்பிடும் 3 வயது குழந்தை - வேண்டுகோள் விடுத்த தாய்!

126-வது இடத்தில் இந்தியா 

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன. மேலும், கனடா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா, குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: முதலிடத்தில் பின்லாந்து - மோசமான இடத்தில் இந்தியா! | Worlds Happiest Countries In 2024 Finland First

அமெரிக்காவும் ஜெர்மனியும் 23, 24-வது இடத்தில் உள்ளன. மொத்தம் 143 நாடுகளில் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்த பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதனை பார்த்த இந்தியர்கள் மோசமான இடத்தில் இந்தியா உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.