வங்கிக் கணக்கிலிருந்து 25 பைசா கேட்ட நபர் அதிரடி கைது - என்ன நடந்தது..?

United States of America World
By Jiyath Jul 08, 2024 07:31 AM GMT
Report

1 சென்ட் (இந்திய மதிப்பில் 0.024 பைசா) காசுக்காக நபர் ஒருவர் சிறை சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

மறுத்த அதிகாரி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சம்டர் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் பிளெம்மிங் (41). இவர் அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் வங்கிக்கு சென்ற மைக்கேல்,

வங்கிக் கணக்கிலிருந்து 25 பைசா கேட்ட நபர் அதிரடி கைது - என்ன நடந்தது..? | Man Arrested For Trying To Withdraw 1 Cent

தனது வங்கிக் கணக்கிலிருந்து 1 சென்ட் (இந்திய மதிப்பில் 0.024 பைசா) வேண்டும் என்று பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இந்த சிறிய தொகையை தர முடியாது என்று மறுத்துள்ளார்.

320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா?

320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா?

நபர் கைது 

இதனால் ஆத்திரமடைந்த மைக்கேல், 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா? என்று வாங்கி அதிகாரியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அவர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

வங்கிக் கணக்கிலிருந்து 25 பைசா கேட்ட நபர் அதிரடி கைது - என்ன நடந்தது..? | Man Arrested For Trying To Withdraw 1 Cent

அதன் பேரில் வங்கிக்கு விரைந்து வந்த போலீசார், அதிகாரியை மிரட்டியது மற்றும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தது போன்ற குற்றத்திற்காக மைக்கேல் பிளெம்மிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.