படுக்கையில் 5 மாதக் குழந்தை - கடித்து தின்று கொன்ற வளர்ப்பு நாய்!
5 மாதக் குழந்தையை நாய் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடித்துக் குதறிய நாய்
தெலங்கானா, தண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து. கல் பாலிஷ் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு 5 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்த்துள்ளது.
இந்நிலையில், குழந்தையை படுக்கவைத்து விட்டு தத்துவும், அவரது மனைவியும் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், இவரது வீட்டிற்கு வந்துள்ளது.
குழந்தை பலி
உடனே, குழந்தையை கண்ட நாய் அதன் மீது பாய்ந்து, குழந்தையின் முகம், கை, கால், தலை என பல்வேறு பாகங்களை கடித்து குதறி தின்றுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.
வீடு திரும்பிய கணவனும் மனைவியும் இதனைக் கண்டு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் நாயை அடித்துக் கொன்றனர்.
இதனையடுத்து, குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.