துருக்கி நிலநடுக்கம் - 3 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 மாத குழந்தை - வைரல் வீடியோ...!
துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் துருக்கியில் கடந்த திங்கட் கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
துருக்கி நிலநடுக்கம்
மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேற்றும் 5-வது முறையாக துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
3 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 மாத குழந்தை
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், துருக்கியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்களுக்குப் பிறகு 2 மாதக் குழந்தையை உயிருடன் மீட்டகப்பட்டுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த உலக மக்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Pulling a two-month-old baby alive after three days under the rubble in Turkey pic.twitter.com/1ePEIkZiDH
— Muhammad Smiry ?? (@MuhammadSmiry) February 8, 2023