மருத்துவரால் ஏற்பட்ட குழப்பம்; சகோதரனுடன் உறவில் இளம்பெண் - காத்திருந்த அதிர்ச்சி!
இளம்பெண் ஒருவர் தனது சகோதரன் என்பது தெரியாமலேயே அவரை காதலித்து வந்துள்ளார்.
மரபணு சோதனை
அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா ஹில் என்ற இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அவருடன் பலமுறை உடலுறவிலும் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
இருவரது மரபணுக்களையும் சோதித்து பார்த்தபோது, அந்த இளைஞர் விக்டோரியாவின் சகோதரர் என்பது தெரியவந்தது. அதாவது, இவர்கள் இருவரும் செயற்கை கருவுறுதல் மூலம் பிறந்தவர்கள். இது இருவருக்குமே ஆரம்பத்தில் தெரியாது. இவர்களது தாயார்களுக்கு டாக்டர். பார்டன் கேட்வெல் என்பவர் மருத்துவம் பார்த்துள்ளார்.
விந்தணு தானம்
அந்த மருத்துவர் கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் விந்தணு தானம் கொடுத்ததாகக் கூறி, தனது விந்தணுக்களையே மறைமுகமாக நோயாளிகளுக்கு கொடுத்துள்ளார்.
அதில், விக்டோரியாவின் தாயாருக்கும், அவரது காதலனின் தாயாருக்கும் இவரே விந்தணு தானம் செய்துள்ளார். இந்த உண்மை மரபணு சோதனை செய்தபோது தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்து போன விக்டோரியா, தனது சகோதரனுடன் உறவில் இருந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.