மகளை காதலித்து ஆபாச படம் எடுத்த வாலிபர் - ஆத்திரத்தில் தந்தை வெறிச்செயல்!

Tamil nadu Crime Death Tiruppur
By Jiyath Jul 04, 2024 06:34 AM GMT
Report

மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபரை தந்தை கூலி படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆபாச படம்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (25) என்பவர் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.

மகளை காதலித்து ஆபாச படம் எடுத்த வாலிபர் - ஆத்திரத்தில் தந்தை வெறிச்செயல்! | Father Killed Youth For His Daughter Porn Photos

இதையடுத்து அவர் அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததை புவனேஸ்வரன் செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். மேலும், அதனை தனது நண்பர்களிடமும் காண்பித்துள்ளார். இதை பார்த்த புவனேஸ்வரனின் நண்பரான தமிழரசன் அந்த படங்கள், வீடியோவை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டார்.

பின்னர் அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தைக்கு அனுப்பிய தமிழரசன், ரூ.15,000 கொடுக்காவிட்டால் அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை அவினாசி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வெளிநாட்டில் கணவன்.. கள்ளத்தொடர்பில் மனைவி - தட்டிக்கேட்டதால் தர்ம அடி!

வெளிநாட்டில் கணவன்.. கள்ளத்தொடர்பில் மனைவி - தட்டிக்கேட்டதால் தர்ம அடி!

வெட்டிக் கொலை

இந்த சம்பவத்திற்கு பிறகும் புவனேஸ்வரன், மாணவியுடனான பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். மேலும், மீண்டும் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து வந்துள்ளார்.

மகளை காதலித்து ஆபாச படம் எடுத்த வாலிபர் - ஆத்திரத்தில் தந்தை வெறிச்செயல்! | Father Killed Youth For His Daughter Porn Photos

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என்று தமிழரசனிடம் கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கூலிப்படை மூலம் புவனேஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் தந்தை கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியின் தந்தை, தமிழரசன் மற்றும் கூலிப்படை கும்பல் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், அவர்களை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.