வெளிநாட்டில் கணவன்.. கள்ளத்தொடர்பில் மனைவி - தட்டிக்கேட்டதால் தர்ம அடி!

Tamil nadu Crime Kallakurichi
By Jiyath Jul 02, 2024 07:03 AM GMT
Report

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவனை, மனைவி உட்பட 4 பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தகராறு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள தொழுவந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் பிரபு (38) - சுகந்தி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் பிரபு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

வெளிநாட்டில் கணவன்.. கள்ளத்தொடர்பில் மனைவி - தட்டிக்கேட்டதால் தர்ம அடி! | Wife Mother In Law Arrested For Attack On Husband

இந்நிலையில் சுகந்தி அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் பிரபு கேட்டுள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்ற கணவர் - கர்ப்பமானதால் அதிர்ந்த குடும்பம்!

மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்ற கணவர் - கர்ப்பமானதால் அதிர்ந்த குடும்பம்!

இருவர் கைது   

இதில் ஆத்திரமடைந்த சுகந்தி, மாமனார் செல்வம், மாமியார் சுமதி, மைத்துனர் அறிவழகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து பிரபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரபுவின் தம்பி விஜயகுமார் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெளிநாட்டில் கணவன்.. கள்ளத்தொடர்பில் மனைவி - தட்டிக்கேட்டதால் தர்ம அடி! | Wife Mother In Law Arrested For Attack On Husband

அதன் பேரில் சுகந்தி உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகந்தி, சுமதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள செல்வம், அறிவழகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.