மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்ற கணவர் - கர்ப்பமானதால் அதிர்ந்த குடும்பம்!
கணவர் ஒருவர் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமியார் வீடு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை வாலிபர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்தை பெண் வீட்டார் முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அந்த பெண் கர்ப்பமானதையடுத்து அவர்களை பெண் வீட்டார் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பிரசவத்துக்காக தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்த அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதனால் தனது மனைவியை பார்க்க கணவர் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது மனைவியின் 17 வயது தங்கையை அவர் காதலித்துள்ளார்.
சிறுமி கர்ப்பம்
அந்த சிறுமியும் தனது அக்காவின் கணவரை காதலித்துள்ளார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு அவர் தாலி காட்டியுள்ளார். அந்த சிறுமியும் கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்துக்கும், அக்காவுக்கும் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தனது மனைவியின் சம்மதத்துடன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த நபர் குடும்பம் நடத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த கிராம மக்கள் குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.