செல்போனில் இருந்த வீடியோ - பெண்ணை மிரட்டிய 49 வயது காவலாளி - கொடூர சம்பவம்!

Tamil nadu Coimbatore Crime
By Jiyath May 30, 2024 08:15 AM GMT
Report

வீடியோவை காட்டி மிரட்டி பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மிரட்டிய காவலாளி

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரங்கசாமி (49) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு பணிபுரிந்தபோது 47 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செல்போனில் இருந்த வீடியோ - பெண்ணை மிரட்டிய 49 வயது காவலாளி - கொடூர சம்பவம்! | Security Guard Threatened Girl By Showing Video

இதனையடுத்து இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை ரங்கசாமி ரகசியமாக வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

கார் டிக்கியை திறக்க முடியாது - நடிகை 'நிவேதா பெத்துராஜ்' போலீசாருடன் வாக்குவாதம்!

கார் டிக்கியை திறக்க முடியாது - நடிகை 'நிவேதா பெத்துராஜ்' போலீசாருடன் வாக்குவாதம்!

2 முறை கைது      

இதுகுறித்து காவல்நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரங்கசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறையிலிருந்து வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

செல்போனில் இருந்த வீடியோ - பெண்ணை மிரட்டிய 49 வயது காவலாளி - கொடூர சம்பவம்! | Security Guard Threatened Girl By Showing Video

இதனை தொடர்ந்து மீண்டும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.