நடிகர் தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்த முதியவர் - மருத்துவமனையில் உயிரிழப்பு!

Dhanush Tamil Cinema Tamil nadu Madurai Tamil Actors
By Jiyath Apr 13, 2024 05:53 AM GMT
Report

நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

நடிகர் தனுஷ் 

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் (70) - மீனாட்சி. இந்த தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நடிகர் தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்த முதியவர் - மருத்துவமனையில் உயிரிழப்பு! | Man Who Claimed As Actor Dhanush S Father Died

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் தம்பதி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?

கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?

உயிரிழப்பு 

மேலும், தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இது ஒரு அபத்தமான வழக்கு என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

நடிகர் தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்த முதியவர் - மருத்துவமனையில் உயிரிழப்பு! | Man Who Claimed As Actor Dhanush S Father Died

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக கதிரேசன் சமீபத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கதிரேசன் நேற்று உயிரிழந்துள்ளார்.