கார் டிக்கியை திறக்க முடியாது - நடிகை 'நிவேதா பெத்துராஜ்' போலீசாருடன் வாக்குவாதம்!
போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நிவேதா பெத்துராஜ்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் போலீசார், சோதனைக்காக நிவேதா பெத்துராஜின் கார் டிக்கியை திறக்குமாறு கூறுகின்றனர்.

அதற்கு அவர், தனனிடம் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும், நான் ஏன் திறக்க வேண்டும் என்றும் கூறி ஒத்துழைக்க மறுக்கிறார். இதனையடுத்து, பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக நீங்கள் திறந்து தான் ஆகவேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர்.
ப்ரோமோஷன்?
அப்போதும் மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், இதனை வீடியோ எடுத்து கொண்டிருந்த நபரின் செல்போனை தட்டிவிடுவது போல் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் எதனால் அந்த வாகன சோதனை நடத்தப்பட்டது? அதற்கு நிவேதா பெத்துராத் ஒத்துழைக்க மறுத்தது ஏன்? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் இந்த வீடியோ நிவேதா பெத்துராஜின் அடுத்த தெலுங்கு படத்தின் ப்ரோமோஷன் என்றும், கவனத்தை ஈர்ப்பதற்காக அவரும் படக்குழுவினரும் சேர்ந்து இதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
emira ithu Shocking to see ?? @Nivetha_Tweets ?!! #NivethaPethuraj pic.twitter.com/Wrbmg1XPTL
— biggbosstamilan (@biggbosstamila) May 30, 2024
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றொரு பேரழிவு திட்டம்! நிந்தாவூரில் சாரா பதுங்கியிருந்ததாக தகவல் IBC Tamil
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan