75 சவரன் நகை போட்டும் வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமை - கணவன் செயலால் மனைவி தற்கொலை!

Kerala Crime Death
By Sumathi Dec 27, 2023 12:18 PM GMT
Report

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வரதட்சணை கொடுமை

கேரளா, வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி. இவருக்கும் கட்டக்கடா பகுதியை சேர்ந்த நவ்பல் என்ற இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

kerala dowry issue

இந்நிலையில், வரதட்சணையாக 75 சவரன் நகை கொடுத்தும், கூடுதல் வரதட்சணை கேட்டு மாமியாரும், கணவரும் கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும், அடித்து தாக்கியதில் தாங்கமுடியாத பெண் அவரது அம்மா வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார்.

மருத்துவ மாணவி தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம் - வரதட்சணை கொடுமை..?

மருத்துவ மாணவி தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம் - வரதட்சணை கொடுமை..?

பெண்  தற்கொலை

அப்போது. நவ்பல் மனைவியை சந்திக்க வந்து சகோதரியின் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் வரும்படி அழைத்துள்ளார். இதற்கு சஹானா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் அவரை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

75 சவரன் நகை போட்டும் வரதட்சணை கேட்டு மாமியார் கொடுமை - கணவன் செயலால் மனைவி தற்கொலை! | Woman Dies For Torture By Husband Mother In Law

இதில் மனமுடைந்து பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடனே, சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.