இறுதிச் சடங்கில் நடந்த பயங்கர சம்பவம் - அலறி அடித்து ஓடிய உறவினர்கள்!
இறுதிச் சடங்கில் பெண் இருவர் உயிரோடு எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிச் சடங்கு
ஒடிசா, பெர்ஹாம்பூரைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54).இவரது மனைவி புஜ்ஜி அம்மா (52). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதில் சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி அம்மாவுக்கு 50 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போதிய பணம் வசதி இல்லாததால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல் அப்பெண் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், புஜ்ஜிக்கு வீட்டில் இருந்தபடியே தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, காயத்திற்க்கு மருந்து மாத்திரை சப்பிட்டு வந்துள்ளார்.
ஷாக் சம்பவம்
இந்நிலையில், இரவு மாத்திரை அருந்திவிட்டு தூங்கிய புஜ்ஜி காலை விடிந்தும் எழுந்திருக்கவில்லை என உணர்ந்த அவரது கணவர் உறவினரிடம் தெரிவித்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி, தொடர்ந்து புஜ்ஜியம்மாவை சுடுக்காட்டிற்கு கொண்டு சென்று அவரை அடக்கம் செய்து தீ வைக்க முயன்றபோது கண் விழித்து எழுந்துள்ளார். இதையடுத்து அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்த உறவினர்கள் ‘பேய்’ என்று அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
அதன்பின் நிதானமாகி அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.