ஈரானில் சகோதரரின் இறுதிச் சடங்கில் தன் தலைமுடியை வெட்டி எறிந்த தங்கை.. - வைரலாகும் வீடியோ
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரன் உயிரிழந்ததையடுத்து, அவருடைய சகோதரி தன் முடியை வெட்டி எதிர்ப்பை தெரிவித்தார்.
மாஷா அமினி மரணம்
ஈரான், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் கடந்த 17-ம் தேதி மாஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
வலுக்கும் போராட்டம்
இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது.
இப்போராட்டத்தில் இறங்கிய முஸ்லீம் பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தனர். ஹிஜாப்பை தீ வைத்து எரித்தனர். தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
தன் தலைமுடியை வெட்டி எறிந்த சகோதரி
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் உயிரிழந்த தன் சகோதரரின் இறுதிச் சடங்கில் தங்கை தன் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை தெரிவித்தார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Iranian woman cut their hair at the funeral of brother of one protester, who was k!lled in protest by mulla regime.#Iran #IranProtests2022 #IranProtests #Mahsa_Amini #HadisNafaji #Hijab #World pic.twitter.com/onxWKm6Bcc
— KafirOphobia (@socialgreek1) September 26, 2022