துடி துடிக்க உயிரிழந்த நண்பன் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி - கோவையில் திக் திக் சம்பவம்..!
நண்பன் இறந்த செய்தி கேட்டு வந்த அகோரி சாமியார் உடல் மீது அமர்ந்து சிவ பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடும்ப பிரச்சனையால் தற்கொலை
கோவை மாவட்டம் சூலுார் அருகே உள்ள குரும்ப பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்சனையால் மனவேதனையில் இருந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமையன்று, விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
உடல் மீது அமர்ந்து பூஜை
மணிகண்டனுடன் சிறுவயது முதல் நண்பராக இருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த அகோரி சாமியார் அவரது மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து இறுதிச் சடங்கில் பங்கேற்க சூலுார் வந்துள்ளார்.
அப்போது காசியில் அகோரிகள் பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல மணிகண்டனின் உடல் மீது அமர்ந்து அவரது நண்பரான திருச்சி அகோரி சிவ வாத்தியங்கள் முழுங்க அகோரிகள் புடை சூழ பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தார்.