எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் - மிரண்ட பயணிகள்

India Indian Railways
By Sumathi Nov 21, 2025 06:10 PM GMT
Report

எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் மேகி சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகி சமையல்

எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் எலெக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தி மேகி சமைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் - மிரண்ட பயணிகள் | Woman Cooks Maggi In Electric Kettle On Ac Train

அதில் சமையலறை எங்கு வேண்டுமானாலும் உள்ளது" என்று மகிழ்ச்சியுடன் பேசிய அந்த பெண், ஒரே கெட்டிலில் 15 பேருக்கு டீ போடும் திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அத்துமீறிய பெண்

இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு விதிகள் மற்றும் பொது நடத்தை குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் - அடுத்து நடந்தது என்ன?

தையல் போடுவதற்கு பதிலாக ஃபெவிக்விக் தடவிய மருத்துவர் - அடுத்து நடந்தது என்ன?

ரயில்வே விதிகளின்படி, ரயில் பெட்டிகளில் உள்ள குறைந்த சக்தி கொண்ட பிளக்குகளில் கெட்டில் போன்ற அதிக வாட்டேஜ் சாதனங்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது மின்சுற்றுகளை ஓவர்லோட் செய்து,

தீ விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. பயணிகள் சூடான உணவுக்கு பேன்ட்ரி கார் சேவையையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.