தொண்டையில் சிக்கிய இறைச்சி; எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய பெண் - அடுத்து நடந்தது..?
இளம்பெண் ஒருவர், தொண்டையில் சிக்கிய இறைச்சியை எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபரீத செயல்
ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்டாகாவோ பகுதியைச் சேர்ந்தவர் ஹீசியா (21). இவர் தனது வீட்டில் வான்கோழியை சமைத்துச் சாப்பிட்டுள்ளார். அப்போது சிறிய இறைச்சி துண்டு அவரின் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனால் மூச்சு விட சிரமப்பட்ட ஹீசியா, உதவி செய்ய அருகில் யாரும் இல்லாததால் தனது டூத் பிரஷை பயன்படுத்தி இறைச்சி துண்டை வெளியே எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கையிலிருந்த டூத் பிரஷ் நழுவி அவரது தொண்டை குழிக்குள் சென்றுள்ளது.
40 நிமிட சிகிச்சை
பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஹீசியா உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்து விவரித்துள்ளார். ஆனால் ஹீசியா கூறியதை முழுமையாக நம்பாத ஊழியர்கள் எக்ஸ்ரே எடுத்த பிறகு தான் இதனை நம்பியுள்ளனர்.
இதனையடுத்து 3 மணி நேரமாக அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர், 40 நிமிட சிகிச்சைக்கு பிறகு வெற்றிகரமாக தொண்டைக் குழியிலிருந்து டூத் பிரஷை வெளியே எடுத்தனர். டூத் பிரஷை உணவுக்குழாய் வழியாகவே எடுத்ததால் அறுவைச் சிகிச்சையும் தேவைப்படவில்லை.