ஹிஜாபை துறந்த செஸ் வீராங்கனை; கைது செய்ய திட்டமிட்ட ஈரான் - குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்!

Spain Iran Citizenship World
By Jiyath Jul 28, 2023 10:35 AM GMT
Report

ஈரானை சேர்ந்த செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியுள்ளது ஸ்பெயின் நாட்டு அரசாங்கம்.

ஹிஜாபை துறந்த பெண்

ஈரானில் பெண்கள் பொதுவெளிகளில் தோன்றினால் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயம். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி ஈரான் நாட்டில் உள்ள தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி

குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மாஷா அமினி என்ற பெண்ணை ஈரான் போலீசார் கைது செய்தனர். போலீசார் தாக்கியதில் மாஷா அமினி கோமா நிலைக்கு சென்று செப்டம்பர் ம் தேதி உயிரிழந்தார்.

ஹிஜாபை துறந்த செஸ் வீராங்கனை; கைது செய்ய திட்டமிட்ட ஈரான் - குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்! | Iranian Chess Player Sara Gets Spain Citizenship I

இதனால் ஈரானில் பல்வேறு பகுதிகளை ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். உயிரிழந்த மாஷா அமினிக்கு நீதி வேண்டும் என்று போராடிய அந்த நாட்டின் கால்பந்தாட்ட வீரர் அமீர் நாசர் அசாதனிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது ஈரான் அரசு.

அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹிஜாபை துறந்த செஸ் வீராங்கனை; கைது செய்ய திட்டமிட்ட ஈரான் - குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்! | Iranian Chess Player Sara Gets Spain Citizenship I

இந்நிலையில் கடந்த ஆண்டு 2022ல் கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் ஈரான் வீராங்கனை சாரா ஹதீம் என்பவர் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். இதனால் நாடு திரும்பியதும் அவரை கைது செய்ய ஈரான் அரசு திட்டமிட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் சாரா ஹதீம் தனது கணவர் மற்றும் 10 மாத குழந்தையுடன் ஸ்பெயின் நாட்டில் குடியேறினார்.

குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்

இதுகுறித்து சாரா ஹதீம் கூறுகையில் "ஹிஜாப் அணியும்போது நான் நானாக இல்லை, நான் நன்றாக உணருவதில்லை. இனிமேல் ஹிஜாப் அணியப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாரா ஹதீமின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் சிறப்பு பிரிவின் கீழ் அவருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.